Posts

Showing posts from December, 2022

மாரடைப்பு

 மாரடைப்பு ஏற்பட்டால்... செய்ய வேண்டிய முதல் உதவி யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.  * 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.  * 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.  * இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.  * மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்-பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.  * மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.  * மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளை...

தேன்

 ஆஸ்துமாவிற்கு இயற்கையான தேனில் உள்ள மருத்துவம்  ஆஸ்துமாவில் இருந்து விடுபட இத்தனை வழிகள் இருக்கு... ஒன்றை பின்பற்றினாலே போதும்... இப்பொழுது உள்ள சூழலில் சுவாசப் பிரச்சனையான ஆஸ்துமா பெரும்பாலும் அலர்ஜியில் இருந்துதான் தொடங்குகிறது. நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன. சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது.   ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்துகள்:  👉 கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் அல்லது தேன் கலந்து இருவேளை உண்ணலாம். 👉 சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம். 👉 லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம். 👉 இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம். ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன்...

மூக்கில் இரத்தம் வடிதல் தீர

 மூக்கில் இரத்தம் வடிதல் தீர : 🪶மருதம்பட்டை - 100 கிராம் 🪶அசோகப்பட்டை - 100 கிராம் 🪶மஞ்சள் - 50 கிராம் 🌷மூன்றையும் தூள் செய்து கொண்டு இரண்டு கிராம் வீதம் காலை, மாலை மோருடன் சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல் தீரும். 👍🏼மற்றொரு முறை 🪶தென்னம்பாளை - 50 கிராம் 🪶வாழைப்பூ - 50 கிராம் 🪶சீரகம் - 10 கிராம் 🪶ஓமம் - 10 கிராம் 🪶மஞ்சள் - 10 கிராம் ☘️இவற்றை தூள் செய்து இரண்டு கிராம் அளவில் காலை, மாலை சாப்பிட்டு வர, மூக்கில் இரத்தம் வடிதல் நீங்கும். 🍃Sri Yoga & Naturopathy🍃 யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp  9952133415

தொப்பை

 தொப்பை இருக்கின்றது என கவலையா? இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து குடித்தால் போதும்!! பெரும்பாலானோர் அதிகம் கவலைப்படும் விஷயமாக இருப்பது தொப்பை தான். 5 நாட்களில் எப்படி தொப்பையை குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தொப்பை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது தான். மேலும் உணவு முறைகள் சரியில்லாத காரணத்தினாலும் தொப்பைகள் ஏற்படும். இதற்காக முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு பட்டை தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு கலந்த பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 5 நாட்களில் தொப்பையானது குறைய தொடங்கும். குறைவான காலத்தில் தொப்பை குறை வேண்டும் என்றால் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு பிறகு சிறு சிறு உடற் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையும் குறையும். நம் உணவில் வெள்ளை சர்க்கரை அதிக அளவு சே...

சாத்துக்குடி சாறு

நல்ல தூக்கம் வர சாத்துக்குடி சாறு  சாத்துக்குடி சாறு – 100 மி.லி தேன் – 1 தேக்கரண்டி      சாத்துக்குடி சாறுடன் தேன் சேர்த்து பருகவும்.      சாத்துக்குடிப் பழத்தில் வைட்டமின் ‘சி’ மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கிறது. இதனால் தூக்கம் இன்மையால் துன்பப்படும் நோயாளிகள் கால்சியச்சத்தால் நரம்பு மண்டலம் அமைதிப்படுத்தப்பட்டு நன்கு உறங்குவார்கள்.      சாத்துக்குடிச் சாறுடன் இளஞ்சூடான நீரையும், ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்து பருகினால் ஜலதோஷம், வறட்டு இருமல் போன்றவை குணமாகும். மலச்சிக்கலும் நீங்கும்.      அனைத்து விதமான காய்ச்சலை இப்பழத்தின் சாறு குறைத்து விடுகிறது. பித்தவாந்தி நீங்க தேன் இஞ்சி   100 கிராம் இஞ்சி எடுத்து தோல் சீவி, கொஞ்சநேரம் வெய்யிலில் காய வைத்து, ஒரு வாயகன்ற சீசாவை எடுத்து அதில் ஆழாக்களவு தேனைவிட்டு இஞ்சியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்றாக மூடிவைக்கவேண்டும்.      தினசரி சீசாவை மூடியபடி, வெய்யிலில் வைத்து எடுத்து வைக்கவும். இந்த விதமாக 21 நாள் வரை ஊறவைத்த பின்னர் அதிகாலை மாலை இரண்ட...