வெந்தய மகிமை
வெந்தய மகிமை! அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம்தான் (Fabaceae family) வெந்தயம். மருத்துவ குணம் மிகுந்த வெந்தயம் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் எனப் பல சத்துக்களைத் தன்னகத்தே பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றது. அதிலும் முளைகட்டிய வெந்தயத்தில் (sprouted fenugreek seeds) இந்தச் சத்துக்கள் கூடுதலான அளவில் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். வெந்தயத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. வெந்தயத்தைப் பொடியாக்கியோ, முளைகட்டியோ தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வருவதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு (LDL Cholesterol) குறைந்து இதய நலன் மேம்படும். வெந்தயப் பொடியைவிட முளைகட்டிய வெந்தயத்தில் கசப்புத்தன்மை குறைவு, சத்துக்களும் அதிகம். நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலும் (antiviral property) வெந்தயத்திற்கு இருப்பதால் சளி சம்பந்தட்ட நோய்களுக்கும் இது நிவாரணம் தரும். அதிக வினைத்திறனுடைய நிலையற்ற உயிர்வளி மூலக்கூறுகளால் (Free radicals) நம் உடலிலு...