Posts

Showing posts from August, 2025

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

 🔵🔵🔵🔵🔵🔵🔵 *தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள் =================== 🔵 *தைராய்டு சுரப்பி* தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பியாகும். இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது, இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. உடலிலுள்ள அயோடினில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தைராய்டில்தான் இருக்கிறது. உணவின் மூலம் கிடைக்கக்கூடிய அயோடினில் பற்றக்குறை ஏற்பட்டால் தைராய்டு குறைபாடு ஏற்படும்.  🔵 *தைராய்டு ஹார்மோன்கள்*  மூளையிலுள்ள `ஹைப்போதாலமஸ்’ என்றழைக்கப்படும் பகுதிதான் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்போதாலமஸ், தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை இருப்பதைக் கண்டறிந்தால், மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்ன...