Posts

Showing posts from June, 2022

நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கிய முள்ளங்கித் துவையல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 29.06.2022 *நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கிய முள்ளங்கித் துவையல்.:*   தேவையான பொருட்கள்.: முள்ளங்கி - கால் கிலோ புளி - 25 கிராம் மிளகு - 10 கிராம் உளுந்தம் பருப்பு - 10 கிராம் உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு செய்முறை.:  முதலில் முள்ளங்கியை சுத்தம் செய்து சிறிதாக அரிந்து நீராவியில் வேக வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் பெருங்காயம் , மிளகு , உளுந்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.  வேக வைத்த முள்ளங்கியுடன் புளி மற்றும் வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.  முள்ளங்கி துவையல் தயார். பயன்கள்.:  இந்த துவையலை நீர்கடுப்பு, நீர்ச் சுருக்கு இருக்கும் பொழுது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்.  உடல் சூட்டினால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.  மூட்டு வீக்கம் உள்ளவர்கள் தினமும் உணவில் இந்தத் துவையலை அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால...

வயிற்றில் கேஸ் (வாயு) சேருவதை தவிர்க்க எளிய வழி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 17.06.2022 *வயிற்றில் கேஸ் (வாயு) சேருவதை தவிர்க்க எளிய வழி :* வயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறை செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் கேஸ் தான் தொப்பைக்கு முதன்மையான காரணம். இன்று கணினி முன்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, துரித உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் உழைப்பு என்பதே இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வயிற்றில் கேஸ் சேருவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனை போக்க சில எளிய டிப்  வயிற்றில் கேஸ் சேர என்ன காரணம்? : சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாத போது அதிலிருக்கும் பேக்டீரியாக்களால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவும் வயிற்றில் கேஸ் சேரும். கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் அடிக்கடி குடிப்பதும்இதற்கு முக்கிய காரணம்  என்ன செய்யலாம் : வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில்,சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள்  நீராகாரம...

ஓமம் பயன்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 12.06.2022 ஓமம் பயன்கள் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும். இன்று கூட நம் கிராமங்களில் சிற...