Posts

Showing posts from May, 2022

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சிகிச்சை

*மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சிகிச்சை.* காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் "முட்டைகோஸ்". இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும். முட்டைகோஸ் பல வகைகளாக இருக்கின்றன. எந்த வகை முட்டைகோஸையும் சாப்பிடுவதால் கிடைக்கும் பொதுவான பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.   பல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது. அதிகச் செலவில்லாத சிகிச்சை. எனவே, இயற்கையான முறையில் மூட்டுவலிக்கு இது தீர்வு தரும் என்கிற நம்பிக்கை காரணமாக, பல மூட்டுவாத (Arthritis) நோயாளிகளின் கவனம் இப்போது முட்டைக்கோஸின் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. `கௌட்' (Gout) எனப்படும் கீல்வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் முட்டைக்கோஸால் சிகிச்சை செய்துகொண்டபோது அது வலியைத் தணித்துள்ளது. முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது? * சில...

கோடையில் உண்ணக் கூடிய பழங்களின் பயன்கள்

*கோடையில் உண்ணக் கூடிய பழங்களின் பயன்கள் :-* *தர்புசணியின்* பயன்கள் : 👉 தர்பு சணி வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும். இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்பு நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும். 👉 இது கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும் கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம். 👉 இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது. 👉 இப்பழத்தை கோசாப்பழம் என்றும் கூறுவர். இப்பழத்தில் அதிகமான சத்தும் கிடையாது, தீமையும் கிடையாது. 👉 தர்புசணி அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். *முலாம் பழத்தின்* பயன்கள் : 👉 முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்து...

தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!! தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தெரியுங்களா? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது. சாப்பிடும் முறை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்று நோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். பூண்டில் ‘அலிசின்’ என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்த...

சிற்றரத்தை

*மூலிகையே மருந்து*!  *கபத்தை விரட்டும் சிற்றரத்தை* தி இந்து தமிழ்பத்திரிக்கையில் *மூலிகையே மருந்து *என்ற தலைப்பில் வெளியான அரசு சித்த மருத்துவர்டாக்டர் வி.விக்ரம்குமார் அவர்களின் மருத்துவ கட்டுரையின் நகல் பதிவு! நன்றி:தி இந்து தமிழ்பத்திரிக்கை. பெரிதும் பேசப்படாத சிற்றரசர்கள், எதிர்பாராத நிலையில் வலிமையான பேரரசனுக்கு நெருக்கடி தந்து வீழ்த்துவதைப் போல, மூலிகைகளில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத சிற்றரத்தை, வலிமைமிக்க கப நோய்களிடம் கடுமையாகப் போராடி அவற்றை வேரோடு அறுத்துத் தள்ளும்.  மூலிகைகளின் நோய் அகற்றும் தரத்தை, சிரத்தையுடன் உயர்த்திப் பிடிக்கும் அற்புதமான மூலிகை இது. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்ற வழக்கு மொழி,  கப நோய்களை வெட்டி வீழ்த்தும் அரத்தையின் வீரத்தைச் சொல்கிறது.  ‘அரத்தை இம்பூறல் முசுமுசுக்கை கோவை அதிமதுரம் இளக்கும் கோழை’ எனும் கோழையை வெளியேற்றும் மூலிகைத் தொகுப்பில் அரத்தைக்குச்  சிறப்பான இடமுண்டு. ஆரம்ப காலத்தில் மணமூட்டியாகச் சமையலில் இடம்பிடித்த சிற்றரத்தைக்கு மிகப் பெரிய மருத்துவப் பாரம்பரியம் உண்டு. சிற்றரத்தை பெயர்க்காரணம்: அரத்தை என...

கடுக்காய் பயன்கள்

:கடுக்காய் பயன்கள் காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் சாப்பிட்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை வீசி குலாவி நடப்பான் என்பது சித்தர்கள் வாக்கு. அம்மாவிற்கு இணையாக யாரும் இருக்க மாட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கடுக்காய் பத்து தாயிற்கு நிகரானது என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு  சிறந்த கடுக்காயின் பயன்கள் பற்றியும் சாப்பிடும் முறை பற்றியும் பார்ப்போம். கடுக்காய் மரம் பெரும்பாலும் இந்தியா, நேபாளம், சீனா, இலங்கை, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற வெப்பமண்டல பகுதிகளில் வளர்கின்றது. கடுக்காய் மரம் 30மீ உயரம் வரை வளரக்கூடியது. கடுக்காய் பொடி பயன்கள்  – Kadukkai Powder Benefits : நம் பாரம்பரிய சித்தமருந்துகளின் ராஜா என்று சொல்லப்படும் கடுக்காய் பல வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடுக்காய் சிறந்த மலமிளக்கியாகயும் இரத்த சுத்திகரிப்பானாகவும் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கொண்டவையாக திகழ்கிறது. நாட்டு மருந்துகளில் மிகச்சிறந்த மருந்து கடுக்காய். கடுக்காயில் அகம் நஞ்சு. கடுக்காயை உடைத்தல் உள்ளே இருக்கும் கொட்டையை...