அசிடிட்டி
*அசிடிட்டி என்றால் என்ன? அசிடிட்டி சரி செய்து செரிமானத்தை சீர்படுத்துவது எப்படி?* =================== வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன. வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே “அசிடிட்டி’ எனப்படும். பொதுவாகவே வயிற்றில் சுரக்கும் அமிலத்திற்கும் குடலுக்கு வந்து சேரும் உணவுக்கும் இடையே ஒரு “ஒப்பந்தமே’ உண்டு. கடினமான உணவு வகைகள் இருந்தால், அதை ஜீரணிக்க அதற்குத் தேவையான அமிலம் அதிகளவு சுரக்க வேண்டும்; மிருதுவான உணவுக்கு குறைந்த அளவு அமிலம். இந்த ஒப்பந்தத்தை மீறி, இரண்டுமே செயல்பட்டால் பிரச்னை தான். அறிகுறிகள்: நெஞ்செரிச்சல்: வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. அஜீரணம்: வயிற்றின் மேல் பகுதியில் எரிவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு; சில நேரங்களில் குடல் பகுதியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அரிதாக சிலருக்கு எவ்வித வலியும் இருக்காது. ஆனால், வயிறு நிரம்...