சாப்பிடுவதில் என்ன சாஸ்திரம் வேண்டியிருக்கு
நீங்கள் இப்படி சாப்பிடுபவர்களாக இருந்தால் கண்டிப்பாக *உங்களுக்கு என்ன செய்தாலும் பிறகு செல்வம் சேராது!* 🙏 சாப்பிடுவதில் என்ன சாஸ்திரம் வேண்டியிருக்கு! என்று நாம் நொந்து கொள்ளலாம். ஆனால் சாப்பிடுவதிலும் சாஸ்திரம் நம்மள வச்சு செய்யுது அப்படின்னு தான் சொல்லணும். எது கிடைச்சாலும், எப்படி வேணா சாப்பிடலாம் என்கிற மனப்போக்கு உங்களுக்கு இருந்தால், நீங்கள் தான் இந்த பதிவை முதலில் படிக்க வேண்டும். செல்வம் சேர்வதற்கும் நாம் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போகலாம். நிறைய சம்பந்தம் இருக்கிறது என்பது தான் உண்மை. நாம் எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சாப்பிடும் பொழுது முதலில் வழித்து சாப்பிடக்கூடாது. ஒரு சிலர் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த அளவிற்கு நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவார்கள். இலையைத் துடைத்து நன்கு வழித்து விரலில் ஒட்டி இருப்பதைக் கூட விட்டு வைக்காமல் சப்பி எடுத்து விடுவார்கள். இதுபோல் சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் தரித்திரம் தான் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். சாப்...