அறுசுவை உணவின் நன்மைகள்
*அறுசுவை உணவின் நன்மைகள்* *இனிப்பு* உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. *புளிப்பு* ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. *துவர்ப்பு* ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. *காரம்* உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. *கசப்பு:* உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூ...