ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. மைக்ரோன் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய். ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் என்னும் ஹார்மோன் அளவு மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. மைக்ரைன் தலைவலியை சாதாரணமாக எண்ன வேண்டாம். அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி தலைவலி மிக கடுமையாக இருக்கும். திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் சாப்பிட பிடிக்காது. ஏன் பார்க்கவே பிடிக்காது. ஒன்றைத் தலைவலியின் போது காரணமின்றி வாந்தி ஏற்படும். என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும். அதனால், ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது. வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாகும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள், விளக்கை அணைத்து விடுவது நல்லது. ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு இருட்டு இதமாக இருக்கும். அதே போல், தலைவலி உள்ளவர்களுக்கு சிறிய சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும். ஒற்றை தலைவலி அல்லது மைக்ரைன் தலைவலிக்கான முக்கிய காரணம்...