கபத்தை விரட்டும் சிற்றரத்தை
மூலிகையே மருந்து! *கபத்தை விரட்டும் சிற்றரத்தை* தி இந்து தமிழ்பத்திரிக்கையில் *மூலிகையே மருந்து *என்ற தலைப்பில் வெளியான அரசு சித்த மருத்துவர்டாக்டர் வி.விக்ரம்குமார் அவர்களின் மருத்துவ கட்டுரையின் நகல் பதிவு! நன்றி:தி இந்து தமிழ்பத்திரிக்கை. பெரிதும் பேசப்படாத சிற்றரசர்கள், எதிர்பாராத நிலையில் வலிமையான பேரரசனுக்கு நெருக்கடி தந்து வீழ்த்துவதைப் போல, மூலிகைகளில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத சிற்றரத்தை, வலிமைமிக்க கப நோய்களிடம் கடுமையாகப் போராடி அவற்றை வேரோடு அறுத்துத் தள்ளும். மூலிகைகளின் நோய் அகற்றும் தரத்தை, சிரத்தையுடன் உயர்த்திப் பிடிக்கும் அற்புதமான மூலிகை இது. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்ற வழக்கு மொழி, கப நோய்களை வெட்டி வீழ்த்தும் அரத்தையின் வீரத்தைச் சொல்கிறது. ‘அரத்தை இம்பூறல் முசுமுசுக்கை கோவை அதிமதுரம் இளக்கும் கோழை’ எனும் கோழையை வெளியேற்றும் மூலிகைத் தொகுப்பில் அரத்தைக்குச் சிறப்பான இடமுண்டு. ஆரம்ப காலத்தில் மணமூட்டியாகச் சமையலில் இடம்பிடித்த சிற்றரத்தைக்கு மிகப் பெரிய மருத்துவப் பாரம்பரியம் உண்டு. சிற்றரத்தை பெயர்க்காரணம்: ...