சாத்துக்குடி சாறு

நல்ல தூக்கம் வர சாத்துக்குடி சாறு
 சாத்துக்குடி சாறு – 100 மி.லி
தேன் – 1 தேக்கரண்டி

     சாத்துக்குடி சாறுடன் தேன் சேர்த்து பருகவும்.
     சாத்துக்குடிப் பழத்தில் வைட்டமின் ‘சி’ மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கிறது. இதனால் தூக்கம் இன்மையால் துன்பப்படும் நோயாளிகள் கால்சியச்சத்தால் நரம்பு மண்டலம் அமைதிப்படுத்தப்பட்டு நன்கு உறங்குவார்கள்.

     சாத்துக்குடிச் சாறுடன் இளஞ்சூடான நீரையும், ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்து பருகினால் ஜலதோஷம், வறட்டு இருமல் போன்றவை குணமாகும். மலச்சிக்கலும் நீங்கும்.

     அனைத்து விதமான காய்ச்சலை இப்பழத்தின் சாறு குறைத்து விடுகிறது.

பித்தவாந்தி நீங்க தேன் இஞ்சி

  100 கிராம் இஞ்சி எடுத்து தோல் சீவி, கொஞ்சநேரம் வெய்யிலில் காய வைத்து, ஒரு வாயகன்ற சீசாவை எடுத்து அதில் ஆழாக்களவு தேனைவிட்டு இஞ்சியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்றாக மூடிவைக்கவேண்டும்.

     தினசரி சீசாவை மூடியபடி, வெய்யிலில் வைத்து எடுத்து வைக்கவும். இந்த விதமாக 21 நாள் வரை ஊறவைத்த பின்னர் அதிகாலை மாலை இரண்டு துண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் பித்தவாய்வு, பித்தக்கிறுகிறுப்பு, பித்தவாந்தி, மயக்கம், பசியின்மை, வயிற்று உப்பசம் இவைகள் பூரணமாகக் குணமாகும்.

சுக்கு பானகம்

தேவையானவை:  வெல்லத் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் – கடுகளவு.

செய்முறை:  வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.

சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.

பழப் பச்சடி

தேவையானவை:  ஆப்பிள் – ப


To see more posts like this and join AYUSH TRUST, click here 👇👇

https://kutumbapp.page.link/dcW922tFCEm

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்