உண்ணும்போது பின்பற்ற வேண்டியவை
உண்ணும்போது பின்பற்ற வேண்டியவை
1. சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
2. பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3. உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
4. நாவில் சுவையை சுவைத்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
5. சாப்பிடும்பொழுது உதட்டை மூடி, காற்று உள்நுழையாமல் நன்றாக மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்கவேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது.
6. சாப்பிடுவதற்கு 1/2 மணிநேரம் முன்பும், பின்பும் நீர் அருந்தக் கூடாது.
7. குளித்து 45 நிமிட நேரம் கழித்து மட்டுமே சாப்பிட வேண்டும்.
8. பேசிக்கொண்டோ, டி.வி.பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது.
9. முதல் ஏப்பம் வந்த உடன் சாப்பிடுவதை நிறுத்தி விடவேண்டும். பசி எடுத்தால் மீண்டும் சாப்பிடலாம்.
10.முடிந்தவரை வீட்டு உணவை (நம்மேல் அக்கறை கொண்டவர்கள் சமைத்த உணவை) உண்ணவும்.
Comments
Post a Comment