அதிக ரத்தப்போக்கைத் தடுக்கும் வழிமுறைகள்

 *மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கைத் தடுக்கும் வழிமுறைகள்*

===================


உடலில் சூடு அதிகரிப்பதால் தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது,காற்றோட்ட

மில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப்பையைப் பாதிக்கும்.


இதனால் மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம்.


நீர்ச்சத்துள்ள உணவுகள்*


நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும்.

மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்

கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும். 


*துவர்ப்பு உணவுகள்*


மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும். 


பிஞ்சு காய்கறிகள்*


மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும். 


முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும். 


செக்கு நல்லெண்ணெய்*


செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்பு

களுக்கு வலிமைச் சேர்க்கும். 


 *கறிவேப்பிலை*


கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும். 


*மோர்*


மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.

 

புட்டரிசி*


அதிக ரத்தப்போக்கு மற்றும் வலியைத் தடுக்க, புட்டரிசி என்று கூறப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


 *உளுந்தங்கஞ்சி*


உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.    


*🍃Sri Yoga & Naturopathy*🍃


யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*


Hare Krsna!

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்