வெந்தய மகிமை

 வெந்தய மகிமை!


அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம்தான் (Fabaceae family) வெந்தயம். மருத்துவ குணம் மிகுந்த வெந்தயம் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் எனப் பல சத்துக்களைத் தன்னகத்தே பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றது. அதிலும் முளைகட்டிய வெந்தயத்தில் (sprouted fenugreek seeds) இந்தச் சத்துக்கள் கூடுதலான அளவில் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். 


வெந்தயத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவை.


வெந்தயத்தைப் பொடியாக்கியோ, முளைகட்டியோ தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வருவதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு (LDL Cholesterol) குறைந்து இதய நலன் மேம்படும். வெந்தயப் பொடியைவிட முளைகட்டிய வெந்தயத்தில் கசப்புத்தன்மை குறைவு, சத்துக்களும் அதிகம்.

 

நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலும் (antiviral property) வெந்தயத்திற்கு இருப்பதால் சளி சம்பந்தட்ட நோய்களுக்கும் இது நிவாரணம் தரும்.


அதிக வினைத்திறனுடைய நிலையற்ற உயிர்வளி மூலக்கூறுகளால் (Free radicals) நம் உடலிலுள்ள செல்களுக்கு ஏற்படும் அழிவைத் தடுக்கும் இயல்பும் வெந்தயத்திற்கு உண்டென்பதால் புற்றுநோய்ச் செல்களையும் இது தாக்கி அழிக்கக்கூடியது. [But it’s not a standalone cure for cancer.]


மாதவிடாய்க் காலத்தில் மாதர்களை விடாது துன்புறுத்தும் வயிற்றுவலியைப் போக்க வெந்தயம் கைகண்ட மருந்து. வீட்டிலுள்ள பாட்டிமார்களைக் கேட்டுப் பாருங்கள், போட்டிபோட்டுக்கொண்டு என் கருத்தை ஆமோதிப்பார்கள். 🙂ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் வெந்தயத்தை அதிகம் பயன்படுத்துவது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம்… மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே கருப்பையைச் சுருங்கச்செய்து குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துவிடுவதற்கு (premature childbirth) வெந்தயம் வழிவகுத்துவிடலாம் என்பதே! 


மற்றபடி மகாசனங்கள் அனைவரும் வெந்தயத்தைத் தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில் உண்பதால் தம்மைத் துரத்திவரும் பல நோய்களைப் புறமுதுகிட்டு ஓடவைக்கலாம். 


Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்