தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்

 தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:


* உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். காலை எழுந்தவுடன் 1- 2  டம்ளர். இளம் சூடான தண்ணீருடன் 2  டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்க வேண்டும்.


* வேக நடை, சைக்கிளிங், ஸ்க்கிப்பிங், குறைந்தது 35 நிமிடம் உடற் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.


* காபி, டீ அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அதற்குப்  பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீ-யில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.பால் சேர்த்து அருந்த விரும்புவர்கள் பாலை நன்கு 3 அல்லது 4 முறை காய்ச்சி பால் ஆடையை  நீங்கிய பின் அருந்தலாம். காரமான உணவுப் பொருள் இஞ்சி,  மிளகு, இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது.  இஞ்சி டீயை 2 – 3 முறை குடிக்கலாம்


* டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி ,கேரட் போன்ற கலோரி குறைவான,அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியமாக  இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.


* காலை உணவு 8.00 – 9.00 மணிக்குள் உண்ண வேண்டும். வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர்,  அதனுடன் கொய்யா 3 துண்டு, வெண்ணெய் தடவாத இரண்டு ரொட்டி அல்லது இரண்டு இட்லி.


* மதிய உணவாக 2கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரை, நீர் சத்து நிறைந்த காய்கறிகள் ( வெண்பூசணி,புடலங்காய் ) பருப்பு சேர்த்து கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காமல் இரண்டு கோதுமை சப்பாத்தியை 12.00 – 1.00 மணிக்குள் உண்ண வேண்டும்.


* இரவு உணவு 7.00 – 8.00 மணிக்குள் வேக வைத்த காய்கறிகள் 3கப் அல்லது சூப், பப்பாளி, அன்னாசிப்பழம் அல்லது ஆரஞ்சு 6  துண்டு, கொய்யா 3 துண்டு  உணவாக எடுத்துக் கொள்ளலாம். 


* பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும்.உப்புள்ள ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட் போன்றவற்றை தவிர்க்கவும். இரவில் உண்ட பின் சிறிது குறுநடை செய்த பின் உறங்கச் செல்லவும்.


* எப்போதும் உணவு உண்பதற்கு முன்பாக ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால், அதிகமான அளவு உணவு உண்ணாமல், கட்டுபாட்டுடன் உண்ணலாம். இவ்வாறெல்லாம் செய்து வந்தால் நீங்களும் உடல் எடையைக் குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.


அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......

.........................................

கரியையும் சாம்பல்தூளையும்

கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது

பட்டிக்காடு என இளித்த பற்கள்

இன்று வேரற்று போனபோது

ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


வெந்தயமும் சீகைக்காயும்

வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி

என்றபோது பித்துக்குளிகள் என

எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை

சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்

வந்தபின்பு ஓடுகின்றேன் 

சீகைக்காய் வாங்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


பாசிப்பயறோ கடலைமாவோ

அரைத்துக்குளி என்ற போது

லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்

அழகு சோப் என அத்தரித்திரங்கள்

கைகாட்டிய கட்டிகளை எல்லாம்

போட்டு தோளல் சுருங்கி 

வயோதிகம் தெரிந்த பின்பு

ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


இருமலோ தும்மலோ வந்த போது

துளசி தூதுவளை சுக்கு மிளகு

போட்டு கசாயம் தந்த போது

முகத்தை சுளித்து காஃப் சிரப்

குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு

ஓடுகின்றேன் துளசி தூதுவளை

 செடி வளர்க்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


வயிறு வலி என்ற போது

வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ

கற்றாழைச்சாறோ கொண்டு வந்து

தந்த போது தூக்கி எறிந்து சீறி

ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு

கருப்பை பழுதடைந்த பின்பு

ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி

மணமாய் தந்தபோது

சன்பிளவர் ஆயில் பார்

முகம் காட்டும் தூய்மை

எனக்கூறி முகத்தில் அறைய

பதிலுரைத்துவிட்டு இன்று

வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத

வாழ்வு வந்த பின்பு

செக்கு நோக்கி ஓடுகின்றேன்

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்......


மண்பானை சமையல்

மண்பானை குளிர் நீரை எல்லாம்

மாற்றி விட்டு ஆர்ஓ வாட்டர்

என புழு பூச்சி கூட வாழத்தகுதி

அற்ற நீரைக்குடித்து குடித்து

சவமான பின்பு ஓடுகின்றேன்

மண்பானை வாங்க

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்.......


படித்த தலைமுறை எனும்

நாகரீகத்தில் திளைத்து

குருகுலக் கல்வியை

கோடிக்கணக்கான ரூபாய்

கல்வியாக்கி கொல்லைத்துளசி

வைத்தியம் மறந்து மாடி மாடியாய்

குளிரூட்டப்பட்ட அறையில் லட்ச 

லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்

வாழ்வில் ஏது சுதந்திரம்

ஏது சுகாதாரம் என்று

எங்கோ இருந்து

அப்பத்தாவும் பாட்டியும்

சிரிக்கிறார்கள்.........

......................சிந்தனைத்தமிழ்.


மூத்தோர்சொல் வார்த்தையும்

முதுநெல்லிக்காயும் 

முன்னே கசக்கும்

பின்னே இனிக்கும்..

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்