பக்கவாதம் என்ற ஸ்ட்ரோக்
பக்கவாதம் என்ற
ஸ்ட்ரோக்...
ஏற்பட்டால் உடனடியாக நாம்
என்ன செய்யவேண்டும்
நான்கரை மணி
நேரத்திற்குள்
பக்கவாதத்தை
வெல்லலாம்... எப்படி......
நம் வீட்டிலோ அல்லது அண்டை வீட்டில் நமக்கு தெரிந்தவர்களுக்கோ பின்வரும் அறிகுறிகள் தோன்றினால் உடனே அதை பக்கவாதம் என்று கொள்ள வேண்டும்
1.நிலை தடுமாற்றம் / சரியாக நடக்க இயலாமை/ தடுமாறி கீழே விழுதல் / சரியாக நடக்க முடியாமை / எழுந்து நடக்க அல்லது உட்கார இயலாமை .
2. கண் பார்வை மங்குதல்/ கண் பார்வை தெரியாமல் போதல்/ கண் பார்வை இரண்டாகத் தெரிதல் .
3. முகம் ஒரு பக்கமாக தொங்கிப்போதல்/ ஒரு பக்கம் வாய் இழுத்துக் கொள்ளுதல்.
4. கைகளோ கால்களோ அசைவின்றி தொங்கிப்போதல்/ அல்லது வலு குறைந்தது போல் இருத்தல்.
5. பேச்சு குளறுதல்/ சுத்தமாக பேச்சு தடைபடுதல் /தடுமாற்றம்.
மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உடனே………
108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு செய்து "பக்கவாதம்" ஏற்பட்டிருப்பதாக கூறுங்கள் ( Time to call 108 ambulance)
பக்கவாத அறிகுறிகள் தோன்றும்
நான்கரை மணிநேரங்களுக்குள்
அந்த பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து
மூளையின் ரத்த நாள அடைப்பினால் பக்கவாதம் ஏற்பட்டது
(80% பக்கவாதங்கள் ரத்த நாள கட்டிகள் மூலம் ஏற்படும் அடைப்பினால் உருவாகுபவையே ஆகும். மீதி 20% ரத்த நாளக் கசிவினால் ஏற்படுபவை) சிடி ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டால்
உடனடியாக அந்த ரத்தக்கட்டியை கறைத்திடும் ஆங்கில மருந்து நான்கரை மணிநேரங்களுக்குள் செலுத்தினால் பக்கவாத அறிகுறிகள் முழுமையாக நீங்கி மாயாஜாலம் போல மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது நடக்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே யாருக்கேனும் பக்கவாத அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாக 108 க்கு அழைத்து அருகில் இருக்கும்…………
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்றிடுங்கள்
அங்கு TAEI மையம் எனும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உடனடியாக பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாக குணமாகலாம்.
தனியாருக்கு செல்ல விரும்புபவர்கள்
மூளை நரம்பியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனைகளுக்கு உடனே செல்ல வேண்டும்.
மேற்சொன்ன சிறப்பு சிகிச்சை பெற இயலாத சிறு குறு மருத்துவமனைகளில் நேர விரயம் செய்யாமல் நேரடியாக
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவது பொன்னான நேரத்திற்குள் சிகிச்சை பெற உதவும்.
நன்றாக நியாபகம்
வைத்துக்
கொள்ளுங்கள்
ஸ்ட்ரோக்………
என்றால் நான்கரை மணிநேரத்திற்குள் எவ்வளவு விரைவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைய முடியுமோ அடைந்து சிடி ஸ்கேன் செய்யப்பட்டு அதற்குண்டான சிகிச்சையைப் பெற வேண்டும்.
நான்கரை மணிநேரத்திற்குள்
பக்கவாதத்திற்கு சிகிச்சை செய்தால் முழு குணம் பெறலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்……
நன்றி🙏
உங்கள் மரு. ச. செந்தில் குமார் BSMS,MD(ACU)
பக்கவாதம் வந்த உடன் இரண்டு காதிலும் நல்லவேளை கீரை சருவிட்டு 20நிமிடம் அடையுங்கள் உடன் நிவாரணம் கிடைக்கும்.
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப் பகுதியில் தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாகக் கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்.
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள்.
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும் பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் முறைகளில் சில!
1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது.
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. அது மட்டும் அல்ல, போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்.
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.
10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள் பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும் இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.
12. சாப்பிட வேண்டிய நேரம்
காலை - 7 to 9 மணிக்குள்.
மதியம் - 12 to 2 மணிக்குள்.
இரவு - 6 to 8 மணிக்குள்.
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத் தான் தூங்க வேண்டும்.
14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
அமருங்கள் சம்மணமிட்டு
சாப்பிடுங்கள் முறையாக
வாழுங்கள் ஆரோக்கியமாக. என்றும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
நல்ல தகவல்களை எல்லோருக்கும் பகிருங்கள்
நன்றி🙏🙏 🙏
Comments
Post a Comment