40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்!
40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்!
1. அகத்திக் கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
2. காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
3. சிறுபசலைக் கீரை - சருமநோய்களைத் தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.
4. பசலைக் கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
5. கொடிபசலைக் கீரை - வெள்ளை விலக்கும். நீர் கடுப்பை நீக்கும்.
6. மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
7. குப்பை கீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
8. அரைக் கீரை - ஆண்மையை பெருக்கும்.
9. புளியங் கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.
10. பிண்ணாருக்கு கீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
11. பரட்டைக் கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
12. பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
13. சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.
14. வெள்ளை கரிசலைக் கீரை - இரத்தசோகையை நீக்கும்.
15. முருங்கைக் கீரை - நீரிழிவை நீக்கும். கண்கள், உடல் பலம்பெறும்.
16. வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
17. முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.
18. புண்ணக் கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
19. புதினாக் கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும். அஜீரணத்தை போக்கும்.
20. நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
21. தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
22. முருங்கை கீரை - சளி, இருமலை துடைத்தெரியும்.
23. முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.
24. பருப்பு கீரை - பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
25. புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
26. மணலிக் கீரை - வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
27. மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் போக்கும்.
28. முளைக் கீரை - பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.
29. சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
30. வெந்தயக் கீரை - மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
31. தூதுவளை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
32. தவசிக் கீரை - இருமலை போக்கும்.
33. சாணக் கீரை - காயம் ஆற்றும்.
34. வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
35. விழுதிக் கீரை - பசியைத்தூண்டும்.
36. கொடிகாசினி கீரை - பித்தம் தணிக்கும்.
37. துயிளிக் கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
38. துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
39. காரகொட்டிக் கீரை - மூலநோயை போக்கும் சீதபேதியை நிறுத்தும்.ஈ
40. மூக்குதட்டை கீரை - சளியை அகற்றும்.
Comments
Post a Comment