இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகள்

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகள்: 

வெண்டைக்காய்: 

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது. அதோடு கூடுதாலாக, மூளை சுறுசுறுப்பாக இயங்க வெண்டைக்காய் உதவுகிறது. 

இலவங்கப்பட்டை: 

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவைப் போலவே, இன்சிலின் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகற்காய்: 

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்த உணவு. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருப்பதால் கணையத்தைத் தூண்டி, இன்சுலின் சுரக்க வகை செய்கிறது. 

வெந்தயம்: 

வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலனைத் தரும். 

மஞ்சள்: 

மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்