மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சிகிச்சை

*மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சிகிச்சை.*


காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.


ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் "முட்டைகோஸ்". இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும். முட்டைகோஸ் பல வகைகளாக இருக்கின்றன. எந்த வகை முட்டைகோஸையும் சாப்பிடுவதால் கிடைக்கும் பொதுவான பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

பல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது. அதிகச் செலவில்லாத சிகிச்சை. எனவே, இயற்கையான முறையில் மூட்டுவலிக்கு இது தீர்வு தரும் என்கிற நம்பிக்கை காரணமாக, பல மூட்டுவாத (Arthritis) நோயாளிகளின் கவனம் இப்போது முட்டைக்கோஸின் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. `கௌட்' (Gout) எனப்படும் கீல்வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் முட்டைக்கோஸால் சிகிச்சை செய்துகொண்டபோது அது வலியைத் தணித்துள்ளது.

முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது?

* சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும்.

* ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்; அதே நேரம் அதன் வளைதன்மை மாறாமலும் இருக்க வேண்டும்.

* வலி வரும்போது அல்லது வலி வருவதாக உணரும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸின் இலைகளை எடுக்கவும். வலியுள்ள இடத்தில் அந்த இலைகளை வைத்து, ஒரு துணியால் கட்டவும். வெதுவெதுப்பாக இருக்கும் தோல்பகுதி சில்லென்று ஆகும்வரை அப்படியே வைத்திருக்கவும். இந்தச் சிகிச்சையில், முட்டைக்கோஸில் இருக்கும் கீல்வாதத்துக்கு எதிராகச் செயல்படும் ரசாயனங்கள் தோல் வழியாக ஊடுருவி, மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வலிக்கான காரணிகளை (Uric crystal deposits) கரைந்துபோகச் செய்யும். அல்லது குறைந்தபட்சம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யும்.

* மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகளை எடுக்கவும். வீங்கிய இடத்தில் இலைகளை வைத்து, துணியால் கட்டுப்போடவும். அப்படியே ஒரு சேரில் அமர்ந்து, வலியுள்ள பாதத்தை மட்டும் 30 நிமிடங்களுக்கு உயர்த்திப் பிடிக்கவும். முட்டைக்கோஸுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. இது, மூட்டில் உள்ள அதிகப்படியான திரவத்தை எடுத்து, வீக்கத்தைக் குறைத்து விடும்.

*🍃Sri Yoga & Naturopathy*🍃

*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்