மனித உடலை இயக்கும் 10 வகையான வாயுக்கள்

மனித உடலை இயக்கும் 10 வகையான வாயுக்கள் பற்றி நாம் அறிவோம்.
****************************
 1பிராணவாயு 
 2அபானன் வாயு           
 3 வியானன் வாயு 
 4 உதானன் வாயு  
 5சமாணன் வாயு
 6 நாகன் வாயு 
 7கூர்மன் வாயு
 8கிருகரன்வாயு
 9தேவதத்தன் வாயு 
10 தனஞ்செயன் வாயு
****************************
 1)பிராணவாயு:
உணவை ஜீரணித்துப் பசிதாகம்
உண்டாக்குவது..,

2)அபானன் வாயு:
 மல ஜலத்தையும் சுக்கில 
சுரோணிதத்தையும்
வெளியே தள்ளுவது..,

3)வியானன் வாயு:
இது உடல் முழுவதும் வியாபித்து ஸ்பரிசத்தை கிரகித்து உணவைச் சாறாகவும்,
சக்கையாகவும்
பிரிப்பது..,

4)உதானன் வாயு: தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச் செய்கிறது.
 இந்த வாயுவால் தான் ஏப்பமும் குறட்டையும் உண்டாகிறது. தூங்கும்போது ஐம்புலன்களையும் 
இருளில்ஆழ்த்தி
விழித்து எழுந்ததும்
அந்த புலன்களுக்கு உரிய இயல்பைக் கொடுப்பது இதுவே..,

5)சமானன் வாயு: உதானன் என்ற வாயு அனுப்பும் உணவின் சாரத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுத்து உடலை வளர்ப்பது..,

6)நாகன் வாயு:
கண்டத்தில் இருந்து
கொண்டு வாந்தியை உண்டு பண்ணும்.
முக்கல், சோம்பல், திமிரு விடுதல் முதலியன இந்த வாயுவின் செயலாகும். கண்ணுக்குப் பார்வை கொடுப்பதும் இதுவே..,

 7)கூர்மன் வாயு:
இது கண் இமைகளை திறக்கவும் மூடவும் செய்கிறது. சிரிப்பு மயிர்க்கூச்செரிதல் முதலியன இதனால் உண்டாகின்றன..,

8)கிரிகரன் வாயு:
தும்மல் மற்றும் அழுகையை உண்டாக்குகிறது.

 9)தேவதத்தன் வாயு:
இது மார்பில் இருந்து கொண்டு கபத்தைச் சேர்த்துக்கட்டி கொட்டாவியையும் விக்கலையும் உண்டு பண்ணும்.,


10)தனஞ்ஜெயன் வாயு:
இது மேற்குறித்த ஒன்பது வாயுக்களிலும் விரவி இருந்துகொண்டு ஒரு வினாடிக்கு 224 மின் அதிர்வு அலைகளை உண்டாக்கி ஒவ்வொரு வாயுவும்
தத்தம் தொழிலைச் செய்யுமாறு இயங்குகிறது. கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தை வெளியே தள்ளுவதும் இதுவே. கூன்,குருடு,முடம் மற்றும் தொழு நோய் உண்டாவதற்கு இந்த வாய்வு குறைவே காரணமாக உள்ளது. உடலைவிட்டு உயிர் நீங்கியதும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான
வாயுக்களும்
ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறுகின்றன. இறுதியாக, தனஞ்ஜெயன் வாய்வு வெளியேறியதும் உடல் வீங்கி வெடித்து விடும்.
****************************
 இது தான் நம்மை வாழவைக்கும் வாயுக்கள் பத்து..,
*****************************

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்