வாய்வு தொல்லை நீங்க
திண்டுக்கலில் இருந்து வர்ம சித்தவைத்தியர் ஜெயகணேசன்
வாய்வு தொல்லை நீங்க:
●வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும்.
● எண்ணெயில் பொரித்த, வாயு காய்கறி பதார்த்தம் நின்று உணவு சாப்பிடும் பழக்கம் போன்றவைகள் நாம் அதிகம் செய்வதால் வாய்வு தொல்லை நாம் உருவாக்குகிறோம்.
வாய்வு தொல்லையில் இருந்து விடப்பட தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
✅அடிக்கடி முறையற்ற வாயுவெளியேறுவதைத் தடுக்கும்
உணவவே மருந்துகள்:
கருவேப்பிள்ளை,புதினா அல்லது கொத்தமல்லி துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி, பப்பாளி, கொய்யா, பலாப்பழம்கள்* நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். அன்றாட உணவுகளில் இருந்து, இஞ்சித் தேன், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும், வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.
🔔குறிப்பு 1 :
சீரகம் ஒரு ஸ்பூன், ஏலம் ஒன்று, பச்சைக் கற்பூரம் மிளகு அளவு ஆகிய மூன்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் உணவிற்குப் பிறகு சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை குறையும்.
🔔குறிப்பு 2 :
துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் இதமான வெந்நீர் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாய்வு தொல்லை குறையும்.
🔔குறிப்பு 3 :
சுக்குமல்லி காபியை குடிப்பது, இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்த மதிய உணவு, மற்றும் தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது போன்ற சில எளிய முறைகளை கொண்டும் வாயு தொல்லையில் இருந்து நாமே விடுபடலாம்.
🔔குறிப்பு 4 :
சாப்பிடும் சமயத்தில் பேசாமல் சாப்பிடவேண்டும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமல் உணவோடு சேர்ந்து தேவைக்கு அதிகமான காற்றும் வயிற்றுக்குள் செல்கின்றது. அந்த காற்று மீண்டும் ஏப்பமாகவோ அல்லது ஆசன வாய் வழியாகவோ வெளியேறுகிறது. தேவை இல்லாமல் காற்று வெளியேறுவதை தவிர்க்க நாம் தேவை இல்லமால் காற்றை உட்கொள்ளாமல் இருந்தாலே போதும்.
🔔குறிப்பு 5 :
பகலில் உறங்குவது தவிர்க்க வேண்டும்,
எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்து வேகவைத்த உணவுகளை உண்பது, இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக உண்பது, சம்மந்தமான பொருட்கள், இறைச்சி போன்றவற்றை தவிர்த்தல், பச்சை காய் கறிகள் உண்பது,
தினமும் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் வாயு தொல்லையில் இருந்து நாமே விடுபடலாம்.
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
தொடர்புக்கு 99 76 22 22 34
Comments
Post a Comment