நாட்டு சர்க்கரை

**நாட்டு சர்க்கரை நல்லதா?* 
சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரை போட்டு டீ / காபி குடிக்கலாமா? 

இப்போது சமுகத்தில் ஒரு பொய் பரப்பப்பட்டு வருகிறது . 

அதாவது சீனி(வெள்ளை சர்க்கரை) தான் கெட்டது என்றும் 
நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்டு சர்க்கரை நல்லது என்பதுதான் அந்த பொய். 

நாட்டு சர்க்கரை எதில் இருந்து வருகிறது ? 

கரும்பில் இருந்து வருகிறது. 

சீனி (வெள்ளை சர்க்கரை)எதில் இருந்து வருகிறது ? 

நாட்டு சர்க்கரையை சுத்தீகரிப்பதால் வெள்ளை சர்க்கரை வருகிறது .

மொத்தத்தில் 
வெள்ளை சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை இரண்டுமே கரும்பின் சாறில் இருந்து வரும் "சுக்ரோஸ்" எனும் பொருளே ஆகும். 

நாட்டு சர்க்கரைக்கு பாலிஷ் போட்டு ஃபவுண்டேசன் பவுடர் எல்லாம் போட்டு பளபளக்க வைத்தால் "வெள்ளை சர்க்கரை"

வெள்ளை சர்க்கரைக்கு மேக்அப்பை களைத்தால் வருவது நாட்டு சர்க்கரை

இரண்டும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஏற்றும். 

இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. விசம் போன்றது

வெள்ளை சர்க்கரை என்பது ஆர்கனோ பாஸ்பரஸ் பாய்சன்(Organo phosphorus poison) என்றால் 

நாட்டு சக்கரை அரளி விதையை போன்றது.

நான் பாலிடாய்ல் கலந்து டீ குடிக்க மாட்டேன் ஆனால் தினமும் இரண்டு அரளி விதையை அரைத்து போட்டு டீ குடிப்பேன் என்று கூறினால் அது எப்படி அறிவுக்கு உகந்தது இல்லையோ அதைப்போன்றது தான் இதுவும். 

சரி நீரிழிவு இல்லாதவர்களுக்கு நாட்டு சக்கரை பெஸ்ட்டா? வெள்ளை சர்க்கரை பெஸ்ட்டா? 

இன்று நீரிழிவு இல்லாதவனுக்கு நாளை நீரிழிவு வரலாம்.

நேற்று நீரிழிவு இல்லாதவனுக்குத்தான் இன்று நீரிழிவு வந்துள்ளது.

நீரிழிவுக்கு இனம் , மொழி, வயது , பாலினம் போன்ற எந்த பேதமும் கிடையாது. 

ஆகவே, அனைவரும் டீ காபி போன்ற பானங்களை இனிப்பு கலக்காமல் அருந்துவதே சாலச்சிறந்தது. 

குழந்தைகளுக்கு வீட்டில் செய்யும் இனிப்பு பதார்த்தங்களில் சிறிய அளவில் நாட்டு சக்கரை / வெல்லம் / பனங்கருப்பட்டி போன்றவை சேர்ப்பதில் தவறில்லை. 

கட்டுரை சொல்லும் நீதி 

நீங்கள் நீரிழிவு நோயாளியா? 

உங்களுக்கு வெள்ளை சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை இரண்டுமே கெடுதல் தான். நாவுக்கு இனிப்பு சுவை தரும் அனைத்துமே கெடுதல் தான். 

சிந்தித்து செயல்படுவோம்

நீரிழிவைக் கட்டுப்படுத்துவோம்

நன்றி..🙏🏻🙏🏻

பகிர்வு

 *Dr.A.முத்துக்குமரன்* 
மித்ரா மருத்துவமனை
அரியாங்குப்பம்
புதுச்சேரி

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்