அரசமரம்

இந்த பதிவை படத்துடன் இணைக்க தெரியவில்லை.சில குறைகள் இருந்தாலும் அது தவறு இல்லை.ஆளுக்கு ஒரு அரசு மரம் வளர்ப்போம் அல்லது வளர்ப்போர் கற்கும் ஆதரவு அளிப்போம்.- மௌனானந்தன். மகாகுரு பக்தர் சபை. "அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம். காரணம் போய் காரியம் போது மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது...."

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழை பெய்தே தீரும்" 

நமது மண்ணின் மரங்களைப் பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்.

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்...

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...

புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான். ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில் பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்கு வளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம். ஒரு மனிதனுக்கு தேவையான உயிர் வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனை பேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவு நேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத்தெளிவும்(ஞானம்) பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...

சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன் வேரினடியில் நீரை ஊற்றி சுற்றிவா... என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர்.  நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தை மட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச் சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச் சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப் போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்பட வேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது. அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம்.  காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது....

இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்து பாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்து விட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத் தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச் சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே. இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

ராஜவிருட்சம்
-------------------------

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்
-------------------

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை
-------------------------------------

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

கருப்பை கோளாறு
----------------------------------

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

பிராணவாயு
-----------------------

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்...🙏🙏🌳🌳

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்