வாசி


**
மனம் என்னும் முதல்குருவை வணங்கி நாம் வாசிக்குள் போகலாம் ..
   இயல்பான செயலாக நமக்குத்தெரியாமல் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வாசியை நமது பழக்கத்துக்கு கொண்டுவருவது இயலாத செயல்...நாம்தான் அதன் தன்மைக்கு தக்கவாறு மாறி அதனோடு இணைந்துகொள்ள வேண்டும்...
  அவதார் படத்தில் வருவது போல பறவையின் உடலோடு நம் உடலை இணைத்தபின் பறவை நமக்கேற்றவாறு ஒத்துழைப்பது போலவேதான் வாசியும்...
    வாசியை உணரவும்..அதன் தன்மையாக மாறவும் நமக்கு தேவையானவை...
   1-சீரான சுவாசம்...
   2-தங்கு தடையில்லாத சுவாசம்....
   3- கபம்,சளி,வாதம் இவை தேவைக்கேற்ற அளவு
      மட்டும் கொண்ட உடல்...
   4-உயிருக்கு துணிந்த தைரியம்...
   5-உடலுக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு...
   6-வருடக்கணக்கில் நீண்ட பொறுமையும்,நிதானமும்...

      இவற்றுக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்...
        முதலில் நம் உடலை சமன்படுத்த நமது ஆரம்பக்கல்விக்கு போகவேண்டும்.
         நம் தமிழ் அரிச்சுவடியான "--  மற்றும்  க்--ன் "வரையான 13 + 18 = 31 எழுத்துக்களையும் அந்தந்த உச்சரிப்பில் நிதானமாக ஒரு நாளுக்கு 21 முறை என்று 21 நாட்கள் வாய்விட்டு உச்சரித்து வரவும்...
       இதனால் உடலின் உயிராற்றலும் மின்னோட்டமும் அதிகரித்து உடலில் ஏற்பட்டுள்ள சக்திஓட்டப்பாதை தடைகளை சரிசெய்யப்படும்..
      நம்ப முடியாது.....ஆனால் அதுதான் உண்மை...

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்