மகரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி*விஞ்ஞானப் பார்வை

வாழ்க வளமுடன்!
 *மகரிஷியின்  எளியமுறை* *உடற்பயிற்சி* *விஞ்ஞானப் பார்வை*
உடற்பயிற்சி செய்வதனால் பிராணவாயு அதிகமாகி, நாளமில்லாச் சுரப்பி ஒழுங்குபடுத்தப்பட்டு,இரத்தம் சுத்தப்படுத்தப் பட்டு,மூன்று ஓட்டங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு, நோய் வராது பாதுகாப்பதோடு,நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி ஆரோக்கியமான உடலையும், நீண்ட ஆயுளையும் தருகிறது.
 *சிறப்பம்சங்கள்* 
1. விலங்கினப் பதிவு நீக்கம் பெறுகிறது. (ரஜோ குணத்திலிருந்து மனம் விடுபட்டு சத்துவ குணமாகிறது)
2.இறையுணர்வு பெற்று, அறநெறி வாழ்வு வாழ உதவுகிறது.
 *உடற்பயிற்சிகள்* அனைத்தும் வர்மப் புள்ளிகளைத் தூண்டுவதாக அமைந்துள்ளமை சிறப்பு என ஒவ்வொரு உடற்பயிற்சியாகக் கூறி அவற்றில் தூண்டப்படும் வர்மப் புள்ளிகள் குறித்து மிக விளக்கமாக இத்தலைப்பில் கூறப்பட்டது. முக்கியமான கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சித்தர்கள் கூறிய 1000 வர்மப் புள்ளிகளில் 108 வர்மப் புள்ளிகள் முக்கியமானவை.
12 படுவர்ம புள்ளிகள்.
96 தொடு வர்மப் புள்ளிகள்.
1 படுவர்மம் ஆனது  8 தொடுவர்மங்களோடு தொடர்பில் உள்ளன.  10 இடங்கள் உயிர் அடங்கல் இடங்கள்.( நம்மை மரணம் வரை கொண்டு செல்லும்.) 
108 வர்மப் புள்ளிகளையும் உள்ளடக்கி நம் உடற்பயிற்சி உள்ளது.
கைப்பயிற்சியில் 1 உயிர் அடங்கலும்
கால்பயிற்சியில் 5 உயிர் அடங்கலும்
நரம்பு- தசை நார் பயிற்சியில் 1 உயிர் அடங்கலும், தேய்த்துவிடுதல் பயிற்சியில் 3  உயிர் அடங்கலும்  நம்மை அறியாமலே தூண்டி விடப்படுகின்றன.
 *நாம் செய்யவேண்டியது* 
உடற்பயிற்சிகளை செய்யும் போது உள்ளுறுப்புகளுடன் பேசிய படியே தவமாகச் செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும்.
 *குரோனாவை வெல்ல* *பயிற்சிகள்*  
1. நரம்பு- தசை நார் பயிற்சிகள் ( நுரையீரலைக் கவனித்து)
2.கபாலபதி( கூடுதல் தகவல்- அல்சைமர் வராமல் தற்காக்க)
3.காய கல்பம்.
ஒவ்வொரு பயிற்சியிலும் தூண்டப்படும் வர்மங்கள், உயிர் அடங்கல் குறித்து விளக்கியதோடு, என்னென்ன உடற்குறைபாட்டுப் பிரச்சனைகளுக்கு  என்னென்ன  பயிற்சிகள் செய்யலாம் எனச் சொல்லப்பட்டது.  14 புள்ளி அக்கு- பிரஷர் குறித்து விரிவாக விளக்கப் பட்டது.
 **நன்றி: பேரா. சௌமித்திரன்* *ஐயா* 
நன்றி! வாழ்க வளமுடன்!!

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்